Wednesday 29 August 2012

சகிப்புத் தன்மை


தமிழகத் தலைநகரின் பிரதான சாலை அது.சிவப்பு விளக்கு விழுந்தவுடன் வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக நிற்க்கின்றன.எல்லாருக்கும் ஏதோ ஒரு அவசரம் இருக்கிறது.ஒரு பக்கம் சுட்டெரிக்கும் வெயில்.சிக்னல் விளக்கில் 40,39,38 என வினாடிகள் எண்ணிக்கை குறைவதை எல்லோரும் ஆர்வமாக பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.

வாகன வரிசைகளில் முதலில் நிற்கிறது ஒரு கார்.60 வயது தாத்தா ஸ்டியரிங் கைப்பிடித்தபடி பச்சை விளக்குக்காகக் காத்திருக்கிறார்.5,4,3 என்று வந்து கொண்டு இருக்கையில் எல்லாரும் ரேஸுக்கு தயார் ஆவதைப் போலத் தயாராக நிற்க்கிறார்கள்....முன் காரில் இருக்கும் தாத்தா கிளட்ச்சை மெதுவாக ரிலீஸ் செய்து ஆக்ஸிலேட்டரை அழுத்துகிறார்,இரண்டு முறை கார் உதறிய அவரது கார் நின்றுவிட்டது.
அடுத்த நொடிக்குள் ஹாரன்கள் அலறுகின்றன.இன்னும் இருக்கும் 30 நொடிக்குள் போயாக வேண்டும்.ஆனால்,தாத்தாவின் வண்டி நகர மறுக்கிறது.ஹாரன்கள் தொடர்ந்து அலறுகின்றன.பின்னால் இருக்கும் இளைஞர் ஏதோ சொல்லி திட்டுகிறார்.தாத்தாவை நோக்கியே எல்லா கண்களும் ஆத்திரமாகப் பார்க்கின்றன,அவர் முகத்தில் பதற்றம்.வேக வேகமாக சாவியைத் திருவுகிறார்.ஆக்சிலேட்டரை மிதுத்துப் பார்க்கிறார்.ஒன்றும் நடக்கவில்லை.பின்னால் இருப்பவர்கள் கத்துகிறார்கள்.
சிக்னல்  மறுபடியும் சிவப்புக்கு வந்து விட்டது.வழி கிடைக்காத பலர் தாத்தாவைத் திட்ட...தர்மசங்கடத்துடனும்,அவமானத்துடனும் என்ன செய்வதெனத் தெரியாமல் தவிக்கிறார்....டிராபிக் கான்ஸ்டபிள் உதவியுடன் வண்டி ஓரம் கட்டப்படுகிறது.

 எல்லாருக்கும் வேலை இருக்கிறது,ஆளாளுக்கு ஓர் அவசரம் இருக்கிறது என்பது உண்மைதான்.இந்த ஹாரன்களுக்கு பின்னால் ஒரு எளியவனின் இயலாமையை ஏளனம் செய்கிற நமது மனப்போக்குதான் தெரிகிறது. 
ஆளாளுக்குத் திட்ட,கையைப் பிசைந்துகொண்டு அவமானத்துடன் பெரியவர் நிற்ப்பதைப்போல யார் வேண்டுமானாலும் நிற்க வேண்டிய நிலை வரலாம்.
தடித்த இரண்டு உயரமான ஆசாமிகள் பாதையை மறித்துக் கொண்டு,'ஏ! நீதான்டா என் காரை இடிச்சுட்டே..." யாரைப் பார்த்துடா டான்னு சொல்ற?' என்று கத்திக்கொண்டு இருக்கிற போது,பெரும்பாலனவர்கள் வண்டியை வளைத்துக் கொண்டு அந்த இடத்தைத் தாண்டிச் செல்கிறோம்.
தாத்தா வண்டி தடுமாறி நிற்க்கிற போது எழுப்பப்பட்ட அந்த எதிர்ப்பு ஹாரன்கள் இப்போது குறைவாகவே ஒளிக்கின்றன.பலசாலியைப்போல பார்வைக்குத் தெரிகிற,ரோட்டை மறித்து காரை நிறுத்தி இருக்கிற 
அவர்கள் மீது ஆத்திரம் காட்ட ரொம்பவே யோசிக்கிறோம்.எளியவனாக இருந்தால்,அந்த கோபம் வெளியே கொப்பளிக்கிறது.பலசாளியாகத் தெரிந்தால் உள்ளுக்குள்ளேயே பொருமிக்கொள்கிறோம்.
ஒட்டு மொத்தத்தில் பொறுத்துக் கொள்ளலும்,சகிப்புத்தன்மையும் இந்த பரபரப்பான உலகில் 'அவுட் ஆஃப் சிலபஸ்'ஆகி மன அழுத்தமும் எகிறுகிறது.
எல்லாம் உடனே நடந்து விட வேண்டும்.நினைத்தபடி நடந்து விட வேண்டும்,தடையில்லாமல் கிடைத்துவிட வேண்டும் என்ற எதிர் பார்ப்புகள்,அதற்கு இடையூறாக எது வந்தாலும் அதில் இருக்கும் நியாயம்,தர்மங்ளைப் பார்க்காமல் கோபமடையச் செய்கிறது.

எனவே நண்பர்களே வாழ்வில்  சகிப்புத்தன்மை நம் குணங்களைக் கெடுப்பதில்லை....காரணமற்ற கோபங்களை தவிர்த்து வாழ்வை இன்பாமாக்கிடுங்கள்....



நன்றி...



No comments:

Post a Comment