Saturday 17 March 2012

நான்கு எழுத்து மந்திரம்!

           வாழ்க்கையில் நினைத்ததை முடித்து வெற்றி வாழ்க்கையை 
அமைத்து கொண்டவரிடம் அப்படி என்ன மாபெரும் சக்தி இருக்கிறது
 என்று சற்று சிந்தனை செய்தோமானால்,அந்த வெற்றியின் இரகசியம்
 நமக்கு தெரிந்த விஷயமாகிவிடும்.விக்கிரமாதித்தியன் வந்து விடை
சொல்ல வேண்டிய வேதாளப் புதிர் அல்ல இது. வாழ்வில் உங்கள் 
வெற்றியின் இரகசியம் நான்கு எழுத்துகளில் அடங்கியுள்ளது...


 அது என்ன நான்கு எழுத்து மந்திரம் என்று நீங்கள் கேட்கிறீர்களா! ஆம்! வெற்றிக்கனியை உங்கள் கரங்களில் கொடுப்பது உங்கள் சிந்தனை!
இதுதான் உங்களிடமுள்ள மாபெரும் சக்தி.

 வாழ்வில் ஒருவரின் வெற்றிக்குக் காரணம் அவருடைய சிந்தனைகள்தான்!

 இன்று நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்பதற்கு அடிப்படைக் காரணம், உங்களுடைய நேற்றைய சிந்தனைகள்,அதனால் உருவான செயல்களின் விளைவுதான்.

கொஞ்சம் நில்லுங்கள்!

         மேலே தொடரும் முன்,கொஞ்சம் நில்லுங்கள்! கவனமாய்ப் படியுங்கள்.
  
வெற்றிகளை வாழ்வில் பெற,நீங்கள் எந்த அளவுக்கு முயல்கிறீர்களோ
அந்த அளவுக்குதான் வெற்றிகள் கிட்டும்.ஆகையால்,நீங்கள் இந்த 
நூலிலிருந்து எந்த அளவுக்குப் பயன்பெற இயலும் என்பது அதன் கருத்துக்களை நடைமுறை வாழ்க்கையில் எந்த அளவுக்குப் பயன்படுத்துகிறீர்கள் என்பதைப் பொறுத்தது.
இந்த கருத்துக்களைப் படித்துவிட்டு செயல் படாமல் நீங்கள் இருந்தால் நிச்சயம் அறிவுப் பூர்வமான கருத்துக்களை அடைய,மகிழ்ச்சியைப் பெற நீங்கள் முயலவில்லை என்றுதான் பொருள்.
 நீங்கள் இந்த நூலிலிருந்து ஒரே ஒரு பகுதியை மட்டும் படித்து,அதன்படி செயல்பட முயற்சி செய்தாலே நடைமுறை வாழ்க்கையில் நல்ல பயன் கிட்டும்.
முழு நூலையும் படித்து,அதில் கூறப்பட்டுள்ள கருத்துக்களை,வாழ்வின் உண்மைகளை,மனதில் வாங்கி படிப்படியாக அன்றாட வாழ்வில் நீங்கள் பயன்படுத்த தொடங்கினால், வாழ்வில் வெற்றி பாதையில் அடியெடுத்து வைத்துவிட்டீர்கள்! வெற்றி வாழ்க்கையின் இலக்கை நோக்கி நீங்கள் நிச்சயம் செல்லுவீர்கள்! இது உறுதி!

 அன்றாடம் படியுங்கள்! உள்ளம் சோர்ந்தால் இந்த நூலின் சில 
பக்கங்களைப் புரட்டுங்கள், தென்பூட்டூம் உங்களுக்கு! வாருங்கள்! 
மேலே தொடருங்கள் வெற்றிப் பாதையிலே...









      

No comments:

Post a Comment