Sunday 6 November 2011

தெரிந்து கொள்ளுங்கள்

                                               
                                                இன்னொரு பூமி’ இருக்குமா?
               இன்றுவரை 230 அயல்கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டு உறுதி செய்யப்பட்டிருக்கின்றன. இதில் ஜெப்ரி மார்சி என்பவர் தலைமையிலான அமெரிக்க ஆராய்ச்சிக் குழு மட்டும் 150 கிரகங்களைக் கண்டுபிடித்திருக்கிறது.
நமது பால்வீதியில் மட்டும் 10 ஆயிரம் கோடி கிரகங்கள் இருக்கலாம் என்று ஜெப்ரி மார்சி தெரிவித்திருக்கிறார். இதில் வியாழன் போன்ற வாயுக்கோள் கிரகங்கள் 600 கோடி இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. பூமியைப் போன்று 10 லட்சம் கிரகங்கள் இருக்கலாம் என்று டெப்ராபிசர் என்ற ஆராய்ச்சியாளர் கூறுகிறார்.
தற்போது 5 கிரகங்களில் பூமியைப் போன்று தண்ணீர் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 50 கிரகங்களில் உயிரினம் இருக்க வாய்ப்பிருப்பதாகவும் விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். மெக்சிகோ அருகே விழுந்த ஒரு விண்கல்லில் சர்க்கரைப் படிவு காணப்பட்டிருப்பதால், உயிரினம் உள்ள அயல்கிரகம் இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
அயல்கிரகங்களில் மனிதர்களைப் போன்ற அறிவுமிக்க உயிரினங்கள் இருக்கின்றனவா? என்று கண்டுபிடிப்பதற்கான திட்டத்தை அமெரிக்கா செயல்படுத்தி வருகிறது. நமது பூமியின் கடலின் அடியில் உள்ள எரிமலைகளிலும், வடதுருவப் பனிப் பிரதேசத்திலும், வறண்ட பாலைவனங்களிலும் ண்ணுயிரிகள் இருப்பதைப் போல, விண்வெளியில் உள்ள அயல்கிரகங்களிலும் உயிரினங்கள் ஏற்கனவே தோன்றி வாழ்ந்து கொண்டிருப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக டெப்ராபிசர் தெரிவித்துள்ளார். பூமிக்கு அருகில் உள்ள அயல்கிரகங்களில் உயிரினங்கள் இருந்தால், அதை 10 வருடங்களுக்குள் கண்டுபிடித்துவிடலாம் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.
பூமியில் இருந்து 44 ஒளிவருட தூரத்தில் உள்ள `உர்சா மேஜர்’ என்ற நட்சத்திரத்தை ஒரு கிரகமானது, சூரியனை பூமி சுற்றிவரும் தூரத்தில் சுற்றிக் கொண்டிருக்கிறது. அக்கிரகத்தில் தண்ணீரும், உயிரினங்களும் காணப்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
`இரவில் நான் கோடிக்கணக்கான நட்சத்திரங்களைப் பார்க்கும்போது அவற்றில் உயிரினங்கள் இருப்பதற்கு வாய்ப்பிருக்கிறது என்றே எனக்குத் தோன்றுகிறது’ என்கிறார், டெப்ரா பிசர்.







                           தேங்காய் எண்ணெயில் விமானம் பறந்தது
உலகளவில்,முன்னணி விமான நிறுவனமான "வெர்ஜின் அட்லாண்டிக்' நிறுவனம், தேங்காய் எண்ணெயை எரிபொருளாக கொண்டு விமானத்தை இயக்கி உள்ளது.
பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வரும் நிலையில்,மாற்று எரிபொருளாக,பயோ எரிபொருளை பயன்படுத்துவது குறித்து ஆய்வு நடந்து வருகிறது. இதற்கான முயற்சியில்,வெர்ஜின் அட்லாண்டிக் நிறுவனம் பல ஆண்டுகளாக ஈடுபட்டுள்ளது. இதன் ஒரு கட்டமாக தேங்காய் எண்ணெய் மற்றும் பாபாசூ எண்ணெய்( தென் அமெரிக்காவில் அமேசான் காடுகளில் விளையும் ஒரு வகை பனை மரத்தின் கொட்டைகளில் இருந்து எடுக்கப்பட்டது) ஆகியவற்றின் கலவையில் உருவான புதிய எரிபொருளை, இந்நிறுவனம் பயன்படுத்தியது.லண்டனில் உள்ள ஹீத்ரு விமான நிலையத்தில் இருந்து,நெதர்லாந்தில் உள்ள ஆம்ஸ்டர்டாம் விமான நிலையம் வரை, இந்த எரிபொருளை கொண்டு,போயிங் 747400 ரக ஜெட் விமானம், இயக்கப்பட்டது. கடந்த ஞாயிற்றுகிழமை,விமான சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்தது.விமானத்தில் நான்கு எரிபொருள் டாங்குகள் உள்ளன. அதில் ஒன்றில், புதிய எரிபொருள் நிரப்பப்பட்டு இருந்தது. இந்த விமானத்தில், பயணிகள் பயணம் செய்யவில்லை. பைலட்டுகளும், தொழில்நுட்ப நிபுணர்களுமே, பயணம் செய்தனர்.தேங்காய் எண்ணெய் மூலம் விமானத்தை இயக்கிய ரிச்சர்டு பிரான்சன் முயற்சியை பலர் பாராட்டி உள்ளனர்

                                              இன்டர்வியூக்கு செல்கிறீர்களா?
* உங்களை தயார்படுத்துங்கள்: எந்த துறை சம்பந்தமான வேலைக்கு நீங்கள் போகிறீர்களோ அதற்கு ஏற்றவாறு உங்களை நீங்கள் தயார்படுத்துங்கள். இன்டர்வியூவில் கேட்கப்படும் கேள்விகளுக்கு எப்படி பதில் அளிப்பது என்று வீட்டிலேயே பிராக்டிஸ் செய்யுங்கள்.

* கம்பெனி பற்றி அறிந்து கொள்ளுங்கள்: இன்டர்வியூ செய்யும் கம்பெனி பற்றிய தகவலை, முடிந்த அளவு இன்டர்நெட் மூலமோ, நண்பர்கள் மூலமோ தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். இதன் மூலம், கம்பெனியில் உங்களைப் பற்றிய நம்பகத் தன்மையை உயர்த்த முடியும்.

* அரை மணி நேரத்திற்கு முன் செல்லுங்கள்: இன்டர்வியூ நடக்கும் இடத்தை, இன்டர்வியூ அன்று தெரிந்துகொள்ளாமல், முன்கூட்டியே தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். இன்டர்வியூ 10 மணிக்கு என்றால், சரியாக 10 மணிக்கு போவதை விட, அரை மணி நேரத்திற்கு முன்பாக அங்கு இருக்கும்படி செல்லுங்கள். இப்படி செல்வதால், எந்தவித டென்ஷனுமின்றி இருக்கலாம். அதன்மூலம் கேட்கப்படும் கேள்விகளுக்கு டென்ஷனின்றி பதிலளிக்க முடியும்.

*தயங்காமல் பதிலளியுங்கள்: உங்களுக்கு தெரிந்த கேள்விகளுக்கு எத்தகைய தயக்கமும் இல்லாமல் பதில் அளியுங்கள். அதே போல், தெரியாத கேள்விகளுக்கு சுற்றி வளைக்காமல், இதற்கான பதில் தெரியவில்லை என ஒப்புக் கொள்ளுங்கள்; அதில் தவறு ஒன்றுமில்லை.

* மொழித்திறனை வெளிப்படுத்துங்கள்: பெரிய நிறுவனங்கள் அனைத்துமே ஆங்கிலத்தில் தான் இன்டர்வியூ நடத்துகின்றன. என்றாலும், முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் தான் உரையாட வேண்டும் என்பதில்லை. தேவைப் பட்டால், இன்டர்வியூ எடுப்பவரிடம் அனுமதி கேட்டு தமிழிலும் பதிலளிக்கலாம்.

* நல்ல ஆடையும், புன்னகையும் அணியுங்கள்: "ஆள் பாதி ஆடை பாதி' என்பர். எனவே, இன்டர்வியூக்கு செல்லும் போது உங்கள் ஆடையில் தனி கவனம் செலுத்துங்கள். நன்றாக ஆடை அணிபவர்களையே நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்களாகவும், திறமையாளர்களாகவும், கடினமாக உழைக்கும் தலைவர்களாகவும் பலரும் அடையாளம் காணு

கிறார்கள். எனவே, நீங்கள் அணியும் ஆடையில் அக்கறை செலுத் துங்கள். அதோடு, உங்கள் முகத்தில் புன்னகையை தவழவிடுங்கள். கேட்கப் படும் கேள்விகளுக்கு புன்முறுவலு<டன் பதில் கூறுங்கள்.

* தேவையற்ற வார்த்தைகளை பேசாதீர்கள்: உங்களுக்கு கேட்கப்படும் கேள்விகளுக்கு, சுருக்கமாகவும், தெளிவாகவும் பதில் கூற முயலுங்கள். அனாவசியமாக பேசிக் கொண்டிருக்காதீர்கள். தேவையற்றதை பேச வேண்டாம்.

* உங்கள் முந்தைய அலுவலகத்தை பற்றி அவதூறு கூறாதீர்கள்:

இன்டர்வியூவில் பொதுவாக கேட்கப்படும் ஒரு கேள்வி, ஏன் பழைய வேலையை விடுகிறீர்கள்? இப்படி கேட்கும் போது, உண்மையை சொல்லும் பேர் வழி என நினைத்துக் கொண்டு உங்கள் பழைய அலுவலகத்தைப் பற்றி அவதூறாக பேசாதீர்கள்; அவை உண்மையாக இருந்தாலும் கூட. மாறாக, பர்சனல் பிராப்ளம் அல்லது வேறு ஏதாவது காரணங்களை சொல்லி சமாளியுங்கள். இல்லாவிடில், இன்டர்வியூ எடுப்பவரிடம் உங்களைப் பற்றிய மதிப்பு குறையுமே தவிர, கூடாது.
                                              கை கூப்பி வணங்குவது ஏன்?
பாரத நாட்டில் பல்வேறு மொழி, இனம் இருந்தாலும் ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது கைகுவித்து வணங்குகின்றனர்.
கோயில்களில் ஆண், பெண் வணங்கும் முறையில் வேறுபாடுகள் உண்டு. பெண்கள் பஞ்சாங்க நமஸ்காரமும், ஆண்கள் அஷ்டாங்க நமஸ்காரமும் செய்வர். இல்லையெனில் இரு கைகளையும் குவித்து வணங்குவர். ஆண்கள் தலைமேல் கைகுவித்து வணங்கும் பழக்கம் நம் நாட்டில் காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை உள்ள பழக்கம்.
உலகத்தில் உள்ள எல்லாப் பொருள்களும் பஞ்ச பூதங்களின் கலப்பால் ஆனது. அளவுகள் வேறுபடலாம். அதை பஞ்சகோசங்கள் என்று கூறுவர். 5 விரல்கள் 5 கோசங்களை காட்டுகிறது. மனிதன் உருவாக காரணமாக உள்ள 5 கோசங்களாக அன்னமய கோசம், மனோமய கோசம், பிராணமய கோசம், விஞ்ஞானமய கோசம், ஆனந்தமய கோசம் என்பன.
மனித உடல் அன்னத்தால் ஆனது. இதை குறிப்பது அன்னமய கோசம். எனவேதான் "உண்டிதற்றே உணவின் பிண்டம்" என்பார்கள். உண்ணும் உணவு மனிதனின் உடம்பை மட்டுமல்ல நம் சிந்தனையையும் நிச்சயிக்கிறது.
காற்றை சுவாசிப்பதால் உடம்பு வளர்கிறது. இது பிராணமய கோசம். அதை எப்படி சுவாசிப்பது அதனால் எந்த வகையான ஆற்றலை பெறுவது என யோக நூல்கள் சொல்கின்றன.
மூன்றாவது மனோமய கோசம். மன எண்ணங்களால் உருவாவது. தர்மசாஸ்திரம் 'மனநலனுக்கு' முக்கியத்துவம் தருகிறது. மனிதன் எதுவாக நினைக்கிறானோ அதுவாகிறான் என்கிறது நூல்கள். விஞ்ஞானமும் இதைதான் கூறுகிறது.
புத்தியால் அமைவது விஞ்ஞானமயகோசம். எண்ணில்லாத சிந்தனைகளுக்கு வடிவம் கொடுப்பதே புத்தியாகும்.
இந்த கோசங்களால் மனிதன் பெறும் மாறாத மகிழ்ச்சி - நிலைத்த இன்பம் ஆனந்தமயகோசம் ஆகும்.
மனிதனுக்கு மனிதன் 5 கோசங்களில் மாறுபடலாம். ஆனால் எல்லோரிடமும் உள்ளது 'ஆத்மா' என்ற ஒன்றுதான் என்பதைதான் கைகுவித்து உணர்த்துகிறார்கள். ஒரு கை தன் 5 கோசங்கள்; மற்றொரு கை அடுத்தவரது 5 கோசங்கள் இரண்டையும் இணைப்பது ஆத்மா ஒன்றே என்று காட்டுகிறது. இறைவன் முன்னிலையில் இந்த உண்மையை பக்திப்பூர்வமாக ஒப்புக்கொண்டு உணர்ந்து செயல்படுவேன் என்று உணர்த்தவே கைகுவித்து வணங்குகிறார்கள்.
கைகுளுக்கிக் கொள்ளும் இந்த காலத்தில், இனி நம்மவருள் எவரையேனும் சந்திக்க நேரிடில், கைக்குவித்து வணங்குவது நமது பண்பாட்டின் வெளிப்பாடு. தமிழ் கலாச்சரத்தின் பெருமை.
                                       மனித உடலைப் பற்றி சில தகவல்கள்.
        கருப்பையில் கரு தரித்ததும் முதலில் உருவாவது இருதயம்தான்.

* இருதயம் ஒவ்வொரு முறை துடிக்கும்போதும் 70 கன செண்டி மீட்டர் இரத்தத்தை தன்னிடமிருந்து வெளியே செலுத்துகிறது. இந்த இருதயம் இவ்வாறு ஒரு மனிதனின் சராசரி 70 ஆண்டு கால வாழ்க்கையில் ஏறக்குறைய இரண்டரைக் கோடி முறைகள் சுருங்கி விரியும்.

* இப்படி இடைவிடாமல் செயல்படும் இருதயம் வலுவிழந்து போய்விடாதா என்கிற சந்தேகம் தோன்றலாம். இருதயத்தின் வால்வுகள் சிறப்புத் தன்மைகள் மிக்க பாப்பிலரி எனும் தசைகளால் ஆனவை. எனவே அதிக வேலையின் காரணமாக வலுவிழந்து போகாமல் இருக்கின்றன. இருதயம் தொடர்ந்து இயங்க இதுவே காரணமாகும்.

* இருதயத் துடிப்பானது, ஒவ்வொரு துடிப்பிற்கும் இடையே வினாடியில் ஆறு பாகத்தில் ஒரு பாக நேரம் நின்று பின்பே துடிக்கிறது.

* நம் மூளையில் ஆயிரம் கோடி உணர்ச்சி அணுக்கள் இருக்கின்றன. அதில் கார்டெக் எனும் பகுதி பல ஆண்டுகளாக நினைவுகளை வரிசைப்படுத்திச் சேமித்து வைத்து விடுகிறது.

* நாம் உட்கொள்ளும் பிராணவாயுவிலும் உடலில் ஓடும் இரத்தத்திலும் ஐந்தில் ஒரு பங்கு மூளையினால்தான் பயன்படுத்தப்படுகிறது. நான்கு நிமிட நேரம் இவை கிடைக்காமல் போனால், மூளை தனது சக்தியை இழந்து விட்கின்றது.

* ஆண்களை விட பெண்களுக்குத்தான் புத்திக்கூர்மை அதிகமாம். இடது கையால் எழுதுபவர்களுக்கு, வலது கையால் எழுதுபவர்களை விட புத்திக்கூர்மை அதிகம்.

* இன்று பிரபலமாக இருக்கும் கணினிகள் ஒரு மூளையின் வேலையைச் செய்ய வேண்டுமானால் அதன் தற்போதைய சக்தியை 10 ஆயிரம் மடங்கு பெருக்க வேண்டியிருக்கும்.

* மூளையிலிருந்து 12 இணை நரம்புகள் உடலின் பல்வேறு இயக்கங்களைக் கட்டுப்படுத்துகிறது.

* மனிதனின் மூளை 100 மில்லியன் துண்டுத் தகவல்களை நினைவில் வைத்திருக்க முடியும்.

* நம் கண்கள் வெளிச்சத்தைப் பார்க்கும் போது ஒருவித இரசாயணக் கிரியை நடத்துகின்றன. இதனால் "டிரான்ஸ்ரெடினின்" என்னும் பொருள் உண்டாகிறது. இதேபோல் இருட்டினைப் பார்க்கும்போது "ரெடாப்சினின்" என்னும் பொருள் உண்டாகிறது. இதனால்தான் வெளிச்சத்திலிருந்து திடீரென்று இருளுக்குள் நாம் நுழைந்தால் கண் தெரிய சிறிது நேரமாகிறது.

* உடலில் சராசரியாக 10,000,000,000,000,000,000,000,000,000 அணுக்கள் உள்ளன. அணுக்களின் வளர்ச்சியில்தான் உடலின் வளர்ச்சியே இருக்கிறது.

* நம் உடலில் சுமார் 5லிட்டர் முதல் 6 லிட்டர் வரை இரத்தம் இருக்கிறது. இது அவரவர் எடையில் மூன்றில் ஒரு பங்காகும்.

* உடலிலுள்ள இரத்த அணுக்களின் எண்ணிக்கை 35,000,000,000 ஆக இருக்கிறது. இந்த இரத்த அணுக்கள்தான் வேண்டிய இரத்தத்தை உற்பத்தி செய்கின்றன. இதில் இன்னொரு வகையான வெள்ளை அணுக்கள்தான் உடலுக்கு நிறத்தைக் கொடுக்கின்றன. ஒவ்வொரு நிமிடத்திற்கும் சுமார் 1,000,000 புதிய சிகப்பு அணுக்கள் உற்பத்தியாகின்றன.

* இதயத்திலிருந்து சுமார் 60 முதல் 70 காலன் வரை இரத்தம் பம்ப் செய்யப்பட்டு வெளியேற்றப்படுகின்றது. இவ்வாறு வெளியேறிய இரத்தம் உடல் முழுவதும் சுற்றிவிட்டு 23 வினாடிகளில் மீண்டும் உள்ளே நுழைந்து விடுகிறது. ஒரு நாளில் சுமார் 3, 700 முறைகள் இரத்தம் இப்படி வருகின்றது.

* மனித உடலில் இரத்தம் ஒரு நாளைக்கு சுமார் 60,000 மைல்களிலிலிருந்து 1,00,000 மைல்கள் வரை பயணம் செய்கிறது.

* பிறக்கும்போது எலும்புகள் 270 இருந்தாலும் நாளடைவில் 206 எலும்புகளாகி விடுகின்றன. சில சிறிய எலும்புகள் பெரிய எலும்புகளுடன் இணைந்து விடுவதே இதற்குக் காரணமாகும்.

* மோவாய் கட்டை எலும்புதான் மிக வலுவுடையதாகும். அது சுமார் 36,000 பவுண்டு எடையைக் கூடத் தாங்கக்கூடியது. *

தசைகள் 639 தசைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒரு சதுர அங்குலத் தசை 55 முதல் 140 பவுண்டு வரை எடையைத் தாங்கும் என்று கூறுகின்றனர்.

* நாம் ஒரு வார்த்தை பேச சுமார் 72 தசைகள் வேலை செய்ய வேண்டியிருக்கும்.

* உடல் நடுங்கும் போது உடலில் ஐந்து மடங்கு உஷ்ணம் பிறக்கிறது.

* நாளொன்றுக்கு மனிதன் குறைந்தது 50 அவுன்சுகள் சிறுநீரை வெளியேற்றுகின்றான்.

* நம் தலைமுடி வெட்டப்படாமல் விட்டுவிட்டால், சராசரியாக 8 அடி வரை வளரும்.

* மனிதன் எவ்வளவுதான் வேகமாக ஓடினாலும் ஒரு மணிக்கு 36 கிலோ மீட்டருக்கு மேல் ஓட இயலாது.

* பிறந்த குழந்தை ஒரு நிமிடத்திற்கு ஒரு முறை சுவாசிக்கிறது. 16 வயதில் ஒரு நிமிடத்திற்கு 20 முறை சுவாசிக்கிறான்.
                              வாழ்கையின் வெற்றிக்கு 20 கோட்பாடுகள்
* எந்த விசயமாக இருந்தாலும் அல்லது எந்த பிரச்னையாக இருந்தாலும் அதை அழகா கையாளுங்கள்.

* அர்த்தமில்லாமலும்,தேவையில்லாமலும் பின் விளைவுகளை அறியாமலும் பேசிக் கொண்டிருப்பதை விடுங்கள்.

* தானே பெரியவன்,தானே சிறந்தவன் என்ற அகந்தையை விடுங்கள்.

* விட்டுக் கொடுங்கள்.

* சில நேரங்களில்,சில சங்கடங்களை சகித்துத்தான் ஆக வேண்டும் என்பதை உணருங்கள்.

* நீங்கள் சொன்னதே சரி,செய்வதே சரி என்று கடைசி வரை வாதாடதிர்கள்.

* குறுகிய மனப்பான்மையை விட்டோளியுங்கள்.

* உண்மை எது,பொய் எது என்று விசாரிக்காமல் இங்கே கேட்டதை அங்கும்,அங்கே கேட்டதை இங்கும் சொல்வதை விடுங்கள்.

* மற்றவர்களை விட உங்களையே எப்போதும் உயர்த்தி நினைத்து கவலைப்படதிர்கள்.

* அளவுக்கதிகமாய் தேவைக்கதிகமாய் ஆசைப்படதிர்கள்.
* எல்லோரிடத்திலும் எல்லா விசயங்களையும், அவர்களுக்கு சம்பந்தம் உண்டா இல்லையோ,சொல்லி கொண்டிருக்காதிர்கள்.

* கேள்விபடுகிற எல்லா விசயங்களையும் அப்படியே நம்பி விடாதிர்கள்.

* உங்கள் கருத்துகளில் உடும்புபிடியை இல்லாமல் கொஞ்சம் தளர்த்திக்கொள்ளுங்கள்.

* மற்றவர்களுக்கு உரிய மரியாதையை கட்டவும்,இனிய இதமான சொற்களை பயன்படுத்தவும் மறக்கதிர்கள்.

* புன்முறுவல் காட்டவும்,சிற்சில அன்பு சொற்களை சொல்லவும் கூட நேரமில்லாமல் நடந்து கொள்ளாதிர்கள்.

* பேச்சிலும்,நடத்தையிலும்,திமிர்த்தனத்தயும் தேவையில்லாத மிடுக்கையும் தவிர்த்து அடக்கத்தையும் பண்பாட்டையும் காட்டுங்கள்.

* அவ்வபோது நண்பர்கள் உறவினார்கள் நேரில் சந்தித்து மனம் திறந்து பேசுங்கள்.

* பிணக்கு ஏற்படும்போது அடுத்தவர் முதலில் இறங்கி வர வேண்டும் என்று காத்திருக்காமல் நீங்களே பேச்சை துவக்க முன்வாருங்கள்.

* தேவையான இடங்களில் நன்றியும்,பாராட்தையும் சொல்ல மறவதிர்கள்.
  

No comments:

Post a Comment