Wednesday 9 November 2011

கணினி தகவல்கள்


           விண்டோஸ் 7 பயன்பாடு தொடர்ந்து பன்னாட்டளவில் அதிகரித்து வருகிறது. இதனைப் பயன்படுத்துவதன் மூலம், இந்த சிஸ்டம் தன்னிடத்தே கொண்டிருக் கின்ற பல வசதிகள் பயனாளர்களுக்குத் தெரிய வருகின்றன.
அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.
1. பைல்கள் இடையே எளிதாக:
ஏதேனும் சாப்ட்வேர் அப்ளிகேஷன் புரோகிராம் ஒன்றில், ஒன்றுக்கு மேற்பட்ட பல பைல்களை, ஒரே நேரத்தில் உருவாக்கிச் செயல்படும் சூழ்நிலை உருவாகலாம். எடுத்துக்காட்டாக, மைக்ரோசாப்ட் வேர்ட் தொகுப்பில், பல டாகுமெண்ட்களை ஒரே நேரத்தில் திறந்து வைத்து கையாளலாம்.
இந்த நேரத்தில், இந்த பைல்கள் திறக்கப்பட்டுள்ள விண்டோக்கள் இடையே சென்று வர, விண்டோஸ் 7 எளிய வழியைத் தருகிறது. டாஸ்க்பாரில் உள்ள பைல்களின் ஐகான்களில் கிளிக் செய்கையில், கண்ட்ரோல் கீயை அழுத்திக் கொண்டால், ஒவ்வொருமுறை கிளிக் செய்கையிலும், அடுத்தடுத்த விண்டோ செயல்பாட்டிற்கு கிடைக்கும்.

2.விண்டோக்களைக் கையாளுதல்:
விண்டோஸ் 7, டாகுமெண்ட் மற்றும் புரோகிராம்களைக் கையாள புதிய வசதிகளைக் கொண்டுள்ளது. விண்டோ ஒன்றினைக் குறிப்பிட்ட இடத்தில் கொண்டு போய் நிறுத்தலாம். இதனை ”docking” என விண்டோஸ் 7 கூறுகிறது.
செயல்படும் விண்டோவினை ஏதேனும் ஒரு பக்கமாக, பாதி திரையில் வைத்திட, அதனை இடது அல்லது வலது பக்கமாக, மவுஸ் கொண்டு இழுத்தால் போதும். விண்டோ தானாக, தன் அளவை பாதி திரைக்கு மாற்றிக் கொள்ளும். அதே போல, மேலாக இழுத்தால், விண்டோ பெரிதாகும். கீழாக இழுத்தால், சிறிய அளவில் மாறும்.
பாதி திரையில் வைத்தபடி, நெட்டு வாக்கில் இந்த விண்டோவினை அமைக்கலாம். பாதி திரை அளவில் இருந்தவாறே, நெட்டு வாக்கில் விரியும், குறையும்.இந்த செயல் பாடுகளை கீகள் மூலமும் இயக்கலாம்.
விண்டோஸ் கீயுடன் இடது அம்புக் குறி அல்லது வலது அம்புக் குறியைப் பயன்படுத்தினால், விண்டோ திரையின் பாதி அளவில் சென்று தன்னை நிலைப்படுத்திக் கொள்ளும்.
இதே போல, விண்டோ கீயுடன் மேல் மற்றும் கீழ் அம்புக் குறியினைப் பயன்படுத்தினால், விண்டோ சுருங்கும், விரியும். விண்டோ + ஷிப்ட்+ மேல் அம்புக் குறி கீகளை அழுத்தினால், அல்லது கீழ் அம்புக் குறி கீயை அழுத்தினால், நெட்டு வாக்கில் திரை பாதியாகும் மற்றும் விரியும்.
3. பல மானிட்டர் செயல்பாடு:
ஒன்றுக்கு மேற்பட்ட மானிட்டர்களை ஒரு கம்ப்யூட்டருடன் இணைத்துச் செயல்படுத்த, விண்டோஸ் 7 எளிதான வழியைத் தருகிறது. இவற்றை இணைத்த பின்னர், விண்டோ+ஷிப்ட்+இடது அம்புக்குறி கீ / வலது அம்புக் குறி கீ களை அழுத்த, செயல்பாடு ஒவ்வொரு மானிட்டராக மாறிச் செல்லும்.
4.உங்கள் டெஸ்க்டாப்பை உடன் அணுக:
விண்டோஸ் 7 தொகுப்பில் தரப்பட்டுள்ள, மிகத் திறன் கொண்ட ஒரு டூல்,டெஸ்க்டாப் கிடைக்க கொடுக்கப் பட்டுள்ள பட்டன் தான். டாஸ்க்பாரின் வலது மூலையில் கடிகாரத்திற்கு அருகே உள்ள சிறிய செவ்வகக் கட்டத்தில் கிளிக் செய்தால், உடனே டெஸ்க்டாப் திரை காட்டப்படும்.
இதனையே விண்டோ கீ + ஸ்பேஸ் கீ அழுத்தியும் பெறலாம்.
5. சிக்கல் இல்லாத விண்டோ செயல்பாடு:
நம் வாழ்க்கையில் எப்போதும் ஒன்றுக்கு மேற்பட்ட செயல்பாடுகளில் மூழ்கிச் சிக்கலில் சிக்கிக் கொள்வோம். விண்டோஸ் தொகுப்பின் செயல்பாட்டிலும், இதே போல பல புரோகிராம் விண்டோக்களைத் திறந்து வைத்து சிக்கிக் கொள்வோம்.
விண்டோஸ் 7 சிஸ்டம், நீங்கள் இயக்கும் விண்டோ தவிர மற்ற அனைத்தையும் பின்னுக்குத் தள்ளுகிறது. விண்டோ + ஹோம் கீகளை அழுத்த, அனைத்து செயல்படாத விண்டோக்களும் மினிமைஸ் செய்யப்படும். அதாவது நீங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் பைல் உள்ள விண்டோ மட்டுமே திரையில் இருக்கும்.
மற்ற அனைத்தும் மினிமைஸ் செய்யப்படும். மீண்டும் அவை அனைத்தும் வேண்டும் என்றால், மீண்டும் விண்டோ கீ + ஹோம் கீ களை அழுத்தினால் போதும்.
6.ஹெல்ப் டெஸ்க்கிற்கு உதவி:
என்னதான் ஹெல்ப் டெஸ்க் உதவி சிஸ்டத்தில் இருந்தாலும், பிரச்னை என்னவென்று நாம் தெளிவாகத் தெரிவித்தால் தான், சிக்கலுக்கான தீர்வினை ஹெல்ப் டெஸ்க் நமக்குத் தர முடியும். சிக்கலின் பின்னணியைக் கம்ப்யூட்டரே பதிந்து தரும் வகையில், விண்டோஸ் 7 “Problem Steps Recorder” என்று ஒரு டூலைத் தந்துள்ளது.
இது ஒரு ஸ்கிரீன் கேப்சர் டூல். இதன் மூலம் பிரச்னை ஏற்பட்ட நிலைகள் ஒவ்வொரு திரைக் காட்சியாகப் பதியப்படுகிறது. இது ஒரு எச்.டி.எம்.எல். பைலாக உருவாக்கப்பட்டு, பின்னர் ஸிப் பைலாக பார்மட் செய்யப்பட்டு, ஹெல்ப் டெஸ்க்கிற்கு அனுப்பப்படுகிறது.
இந்த பதிந்திடும் புரோகிராம் கண்ட்ரோல் பேனலில் கிடைக்கிறது. “Record steps to reproduce a problem” என்ற பிரிவில் இது உள்ளது. அல்லது psr.exe என்ற பைலை இயக்கினால் போதும்.
7.டாஸ்க் பாரில் போல்டர்கள்:
வழக்கமாக, நாம், ஒரு குறிப்பிட்ட போல்டரில் அடிக்கடி பயன்படுத்தும் பைல்களை வைத்திருப்போம். கம்ப்யூட்டரை இயக்கியவுடன், இந்த போல்டருக்குத்தான் அடிக்கடி சென்று, திறந்து அதில் உள்ள பைல்களை டபுள் கிளிக் செய்து இயக்குவோம்.
இவ்வாறு அடிக்கடி திறக்கும் போல்டர்களை, உங்கள் விரல் நுனியில் வைத்துக் கொள்ள, விண்டோஸ் 7 உதவுகிறது. அடிக்கடி பயன்படுத்தும் போல்டரின் மீது ரைட் கிளிக் செய்து, அப்படியே இழுத்து வந்து, டாஸ்க்பாரில் போட்டு வைக்கலாம்.
அங்கே போல்டர் ஐகானாக அது அமர்ந்துவிடும். பின்னர், அதில் கிளிக் செய்து, மிக எளிதாக பைல்களைப் பெறலாம். குயிக் லாஞ்ச் புரோகிராம் போல, இது குயிக் லாஞ்ச் போல்டராகச் செயல்படுகிறது.  
                                           


தற்போதைய இணைய உலகில் மின்னஞ்சல் சேவை என்பது பலருக்கும் அவசியமான ஒன்றாகிவிட்டது. சிலர் ஒன்றுக்கு மேற்பட்ட மின்னஞ்சல் கணக்கு வைத்திருக்கிறார்கள். மின்னஞ்சல் வைத்திருப்போருக்கு இருக்கும் பெரிய தொல்லை தங்களது நண்பர்களிடமிருந்து வருவதைவிட விளம்பரங்கள் அடங்கிய மின்னஞ்சல்கள், Spam என்று சொல்லக்கூடிய குப்பை மின்னஞ்சல்களும் வருவதே. இந்த மாதிரி குப்பை மின்னஞ்சல்கள் அனுப்பும் நிறுவனங்கள் இணையத்தில் அங்கங்கே வெளியிடப்பட்டிருக்கும் நமது மின்னஞ்சல் முகவரிகளை சேகரித்து மொத்தமாக அனுப்புகின்றன.
மேலும் நமது மின்னஞ்சல் முகவரிகளை புதியவர்களுக்கு தெரியாத்தனமாக கொடுத்திருப்போம். தொல்லை செய்வதற்கு என இருக்கும் சிலர், பழகிய நண்பர்கள் கூட தேவையில்லாத ஆபாச மின்னஞ்சல்களை அனுப்பிவைப்பர்.
ஜிமெயில் கணக்கில் (Gmall Account) குறிப்பிட்ட நபரின் மின்னஞ்சலையும் குறிப்பிட்ட தளத்திலிருந்து வரும் மின்னஞ்சல்களையும் எப்படி தடை செய்வது என்று பார்ப்போம்.
GMAIL
1. ஜிமெயில் கணக்கில் நுழைந்தவுடன் வலது மேல் ஓரத்தில் Create a Filter என்று இருக்கிறதா எனப் பாருங்கள். இல்லாவிட்டால் Settings – Filters செல்லவும்.
2. பின்னர் From என்ற பெட்டியில் உங்களுக்கு வேண்டாத நபரின் மின்னஞ்சலை அடிக்கவும் குறிப்பிட்ட தளத்திலிருந்து வரும் மின்னஞ்சல்களைத் தடுக்க “@amazon.com” இந்த மாதிரி கொடுக்கவும். ஒன்றுக்கு மேற்பட்ட மின்னஞ்சல்களைத் தடுக்க ஒவ்வொன்றுக்கும் இடையில் / குறியீடைக் கொடுக்கவும். mall1@example.com | mall2@example.com
3. பின்னர் Next step என்பதைக் க்ளிக் செய்யுங்கள் இதில் மின்னஞ்சல்களை என்ன செய்ய வேண்டும் எனக் குறிப்பிட வேண்டும். இதில் Delete lt என்ற விருப்பத்தைத் தேர்வு செய்யவும். மேலும் வலது ஓரத்தில் உள்ள Also apply Filter to _ conversations below என்பதையும் டிக் செய்யவும். இதனால் ஏற்கனவே வந்த மின்னஞ்சல்களும் தானாகவே அழிந்துவிடும். பின்னர் Create Filter என்பதை கிளிக் செய்து உறுதிசெய்யவும்.
4. இதில் உள்ள இன்னொரு வசதி என்னவென்றால் குறிப்பிட்டவரின் மின்னஞ்சல்களை அழிக்க வேண்டாம், அவற்றை ஒரு தொகுப்பாக போட்டு அதற்கு பெயரிட்டுக்கொள்ள Skip the Inbox (Archive lt) என்பதை தேர்வு செய்து Apply the lable பகுதியில் வேண்டிய பெயரை கொடுத்துக்கொள்ளவும். இவை மொத்தமாக குறிப்பிட்ட பெயரில் சேமிக்கப்பட்டிருக்கும்.
5. இன்னும் சில மின்னஞ்சல்களை இதே மாதிரி தடை செய்ய “ l “ குறியீடைக் கொடுக்கலாம். அல்லது மீண்டும் Create a Filter கிளிக் செய்து தடை செய்யலாம்.
Yahoo Mail
1. உங்கள் Yahoo மின்னஞ்சல் கணக்கில் நுழைந்து வலது மேல் ஓரத்தில் உள்ள Options – More options… செல்லவும்.
2. இடதுபக்கம் வரும் மெனுவில் Spam என்பதை கிளிக் செய்யவும். வலது பக்கமுள்ள Blocked Email addresses பகுதியில் உங்களுக்கு வேண்டிய மின்னஞ்சல்களை சேர்த்துக்கொள்ளலாம். நீங்கள் சேர்க்க சேர்க்க அவர்களின் பெயர்கள் கீழே தெரியும்.
3. கடைசியாக மேலே உள்ள Save changes என்பதை கிளிக் செய்தால் உங்களின் விருப்பம் சேமிக்கப்படும். இனிமேலும் உங்களை தொந்தரவு செய்யும் மின்னஞ்சல்களை நீங்கள் பார்வையிடப் போவதில்லை.
நம் ஆவணங்களை விரும்பிய வகைக்கு மாற்ற ConvertDoc மென்பொருள்
சில நேரம் நம்மிடம் உள்ள பிடிஎப் (Pdf) கோப்புகளை வேர்டு டாகுமெண்ட்டாக (Word document) மாற்ற வேண்டியிருக்கும். மேலும் வேர்டு கோப்புகளை பிடிஎவ் கோப்புகளாக மாற்ற நினைப்போம். இரண்டும் வெவ்வேறு வகைகளாயினும் நமது குறிப்பிட்ட வசதிகளுக்காக மாற்றுவோம். இதற்கு ஒரு இலவச மென்பொருள் உள்ளது. இதன் பெயர் ConvertDoc ஆகும்.
இந்த மென்பொருள் பயன்படுத்த எளிமையானது. கணனியில் பல இடங்களிலிருந்தும் பல வகைகளில் இருக்கும் கோப்புகளை விரைவான வேகத்தில் இது வேண்டிய வகைக்கு மாற்றித் தருகிறது. (Document converting)
இந்த மென்பொருள் மூலம் Pdf, doc, docx, txt, htm, rtf போன்ற முக்கிய ஆவண வடிவங்களிலிருந்து மேற்கண்ட வகைகளில் ஒன்றினுக்கு மாற்றிக் கொள்ள முடியும்.
இதில் வேண்டிய கோப்புகளை தேர்வு செய்து விட்டு என்ன வகைக்கு (Output type) மாற்ற வேண்டும் என்பதையும் எங்கே சேமிக்கப்பட வேண்டும் (Output folder) என்பதையும் தேர்வு செய்து விட்டு Convert பட்டனை கிளிக் செய்தால் போதும்.
இந்த மென்பொருள் விண்டோஸ் இயங்கு தளங்களில் மட்டுமே செயல்படும்.

2 comments:

  1. தினேஷ் நல்ல ஆரம்பம், தொடர்ந்து எழுதுங்கள், நிறைய படியுங்கள், நன்றி

    ReplyDelete