Saturday 19 November 2011

விழித்தெழு தமிழா…

  கை காசுகாக குனிந்தோம்..
கலாச்சாரத்தை மறந்தோம்..
வீரத்தை விலைகொடுத்தோம்..
வெறும் இயந்திர கூடுகளாய் வாழ்ந்தோம்…
நாம் யார்?? சற்று சிந்திர்த்து பார்த்தாயா…
பிறர் எழுத்துக்கள் உருவாக்கிய காலத்தில், செம்மையாய் ஆட்சி புரிந்தோர் நாம்..
பல நூறு ஆண்டுகளாய் வீரத்தால் வெற்றி கொண்ட நாம் இப்போது வீழ்ந்து கிடப்பது ஞாயமா..
மழையிலும் வெயிலிலும்.. 
இருக்க இடமின்றி, உன்ன உணவின்றி, உடுத்த உடையின்றி..
நம் இனிதோர் பிணங்களாய் நசுகபடுகிறோம்..
கொட்ட கொட்ட குனிந்தது போதும்..
புற முதுகு காட்டி ஓடி ஒளிந்ததும் போதும்..
நம்மை எட்டி மிதித்தவன் இனி ஒரு நொடியும் எழுதிரிக்க கூடாது..
நம்மை கேலி பேசியவன் இனி ஒரு நொடியும் வாய் பேசக்கூடாது…
நம் பிள்ளைகள்…
வான் மழையில் நனையவேண்டுமேதவிர , வெடி குண்டு மழையில் நனையக்கூடாது..
பூர் தரையில் விளையடவேண்டுமே தவிர கன்னி வெடிகளுக்கு இறையாகிவிட கூடாது..
வரலாற்று பாகங்களில் புதைந்த நம் வீரத்தை வெளியில் எடுபோம்..
நாம் யார் என்பதை நெஞ்சில் நிறுத்தி..
கண்கள் பொரிபட விழித்தெழு தமிழா..
இந்த சிங்கத்தின் சீற்றத்தை இவ்வுலகிற்கு மீண்டும் காட்டுவோம்…
“வீறுகொண்டு எழுவோம்..
வெற்றி வரலாறு படைப்போம்”


நாடுகள் வேறாயினும் தமிழ் இனம் ஒன்றே..
பேசும் விதம் வேறாயினும் பேசும் மொழி ஒன்றே..
என் இன மக்களுக்கு என் சிறிய சமர்ப்பணம்“ 
                                                                                                       -முகுந்தன்

   இது வேறொரு தளத்தில் இருந்து பதிவு செய்யப் பட்டது.....





No comments:

Post a Comment